முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
எனினும், பண்டிகைக் காலங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முட்டை இறக்குமதி
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50 இலட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும், இதன் காரணமாக முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சதொசக்கு நாளாந்தம் சுமார் 5 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.