கம்பகா புகையிரத நிலையத்திற்கு அருகில் வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 17 தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கம்பகா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, குறித்த துப்பாக்கியுடன், T-56 துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 10 தோட்டாக்கள், 2.2 மில்லிமீற்றர் அளவுடைய 7 தோட்டாக்கள் மற்றும் 4337 மி.கி ஐஸ் மருந்து ஆகியவற்றை வைத்திருந்தார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
இந்த சந்தேக நபர் உந்துகொட, ருக்கவில பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.