இதுவரை காலமும் நிரந்தர நியமனம் வழங்கப்படாத தொண்டர் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து திருகோணமலையில் (Trincomalee) ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது, கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்துக்கு முன்பாக இன்று (01.04.2024) நடைபெற்றுள்ளது.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களால் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் செயலாளரிடம் மனு ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நிரந்தர நியமனம்
அதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பவனியாக சென்ற குறித்த ஆசிரியர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானையும் (Senthil Thondaman) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
கிழக்கு மாகாண சபையானது செயற்பாட்டில் இருந்தபோது நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு பல ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த நேர்முகத் தேர்வில் போதிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறிய பலர் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.