இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுர்தா சுரேன்குமார் அமுருதா சுரேன்குமார் இடம்பிடித்துள்ளார்.
அமுருதா சுரேன்குமார் இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். அமுருதா சுரேன்குமார் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றுள்ளார்.
அமுருதா சுரேன்குமார் புலம்பெயர் தேசத்தில் சாதனை
இங்கிலாந்து 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணி தற்பொழுது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை 19 வயதுக்கு உட்கட்ட மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அமுருதா சுரேன்குமார் களமிறங்கியிருந்தார்.
பந்து வீச்சில் மூன்று ஓவர்களை வீசி 24 ஓட்டங்களை கொடுத்திருந்ததுடன் துடுப்பாட்டத்தில் ஓட்டமெதுவும் பெறாது அமுருதா சுரேன்குமார் ஆட்டமிழந்தார்.
அமுர்தாவின் தந்தையான சிவா சுரேன்குமார், யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.
இந்நிலையில் இலங்கையில் இருந்திருந்தால் அமுருதா சுரேன்குமார் கிரிகெட்டில் நுழைய விட்டிருப்பார்களோ தெரியாது. ஆனால் புலம்பெயர்ந்து சென்று இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக்கொண்ட அமுர்தா சுரேன்குமார் அமுருதா சுரேன்குமார் ஈழதமிழர்களுக்கு பெருமையாகும்.