இலங்கையில் சிறைச்சாலை கைதிகளை பார்வையிட பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் கைதிகளை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 11ஆம் திகதி முஸ்லிம் கைதிகளின் உறவினர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் சிறைச்சாலைகள் திணைக்களம் செய்துள்ளது.
சுகாதார நெறிமுறைகள்
அதன்படி, அனைத்து சிறைச்சாலைகளும் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் சுகாதார நெறிமுறைகளை கடைபிடித்து, கைதிகளின் உறவினர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வரும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை ஏற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபருக்கு மட்டுமே போதுமான அளவு பொருட்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.