சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்கவை (Kapila Wickramanayake) விளக்கமறியலில் வைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடைக் கோரிக்கை மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது, எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி வரை பிற்போடப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி வழக்கில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விக்ரமநாயக்க, தனக்கு மாளிகாகந்த நீதவான நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டவிரோதமானதென அறிவித்து, தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இந்நிலையிலேயே, குறித்த மனுவிற்கான தீர்ப்பானது, ஏப்ரல் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மருந்து ஊழல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.