வீட்டுக்கு வீடு வாசப்படி
நடிகர் திரவியம், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியலின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்.
முதல் சீரியலில் இவர் கிராமத்து கெட்டப்பில் நடித்து மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்தார். அதே பெயரில் இரண்டாம் பாகத்தில் பணக்கார வீட்டு பையனாகவே நடித்திருந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ஈரமான ரோஜாவே சீரியல் இரண்டாம் பாகம் முடிந்தது, அதில் நடித்த நடிகர்களும் அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாகிவிட்டனர்.
இந்த நிலையில் தான் திரவியம் புதியதாக வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற தொடரில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
ஆரம்ப தேதி
இந்த நிலையில் திரவியம் விஜய்யில் ஒளிபரப்பாக போகும் வீட்டுக்கு வீடு வாசப்படி என்ற தொடரில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக பணக்கார பிசினஸ் மேனாக இவர் நடிக்கிறார்.
அந்த குழந்தை விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் அபியின் குழந்தையாக நடித்த குட்டி பாப்பா தான் இந்த சீரியலில் திரவியம் குழந்தையாக நடிக்கிறார்.
ஏற்கெனவே புரொமோ வெளியாகிய நிலையில் தொடர் வரும் ஏப்ரல் 22ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
View this post on Instagram