முட்டை விலை அதிகரிப்பால் பண்டிகை காலங்களில் கேக் உற்பத்தியை மேற்கொள்ளவில்லை என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கேக் உற்பத்தி
இது குறித்து மேலும் கூறுகையில், தற்போது சந்தையில் முட்டை ஒன்று 55 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.
முட்டையின் விலை அதிகரிப்பு காரணமாக பண்டிகை காலத்தில் சுமார் 25 சதவீதமான கேக் உற்பத்தி மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை மலைநாட்டு பகுதிகளில் பயிரிடப்படும் மரக்கறிகளின் விலை சந்தையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.