கனடாவில் ,பிரபல பஞ்சாபி பாடகரான ஏ.பி. தில்லான் கோச்செல்லா மேடையில் கிடாரை உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது.
பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்ட அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், ‘சம்மர் ஹை’ ஹிட்மேக்கர் என்ற பயணத்தின் ஒரு பகுதியாக மேடையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும் காட்சி உள்ளது.
அதில் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்திய அவர் முடிவில் தனது கிடாரை மேடையிலேயே வீசி உடைப்பது போன்று காட்சி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.