மனைவி உயிரிழந்த நிலையில் தனது சொந்த மகளான 17 வயதான யுவதியை 5 வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தை இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தெரிய வந்துள்ளது. சந்தேகநபரின் மனைவி 6 வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் தனது மூத்த மகளை சுமார் 5 வருட காலமாகப் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தற்கொலைக்கு முயன்ற மகள்
சந்தேக நபருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் , இரண்டாவது மகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றபோது அதனைக் கண்ட மூத்த மகள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தனது இரண்டாவது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபருக்கு எதிராக அவிசாவளை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சந்தேக நபர் குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றில் ஆஜராவதைத் தவிர்த்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதேசமயம் , சந்தேக நபரின் ஒரு பிள்ளை சுகயீனமடைந்துள்ளதுடன் சுகயீனமடைந்த பிள்ளையை தன்னால் பராமரித்துக் கொள்ள முடியாததால் இவர், தனது பிள்ளையை உயிரிழந்த மனைவியின் சகோதரியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.