நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று (25) தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோருக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்
அதன்படி, இன்று (25) கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் (1 பவுண்) தங்கம் 173,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
நேற்று (24) 22 கரட் (1 பவுண்) தங்கம் 174,800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை , நேற்று (24) 190,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் (1 பவுண்) தங்கம் இன்று (25) 188,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.