தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று (25) அனுமதி வழங்கியது.
எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த தீர்மானத்தை ஆதரித்தார். அதேவேளை 91 வயதாகும் ஆர் சம்பந்தன் தற்போது சுகயீனமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.