நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயலால் தமிழ் மக்களின் அபிவிருத்திக்கான 25 கோடி இழப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா மீண்டும் தகவல் வெளியாகியுள்ளது.
நிதி ஒதுக்கீட்டு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐந்து கோடிகள் ஒதுக்கப்பட்டது.
அதற்கான திட்டத்தினை குறித்த காலத்திற்கு முன்பாக முன்வைக்காமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜவரோதயம் சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்களது ஒதுக்கீடுகள் கிடைக்கவில்லைஎன்று தெரிய வருகின்றது.
அரசினால் மக்களுக்கு ஒரு சில அபிவிருத்தி செய்யவென நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற குறித்த நிதியையே மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய முடியாத நாடாளுமன்ற உறுப்பினர்களா? என்ற வினாவுனடன் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.