தம்புள்ளை ஹபரணை வீதியில் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் திருமண் நிகழ்விற்கு சென்ற பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று அதே திசையில் பயணித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
லொறியுடன் மோதி விபத்து
விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியில் பயணித்த பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஹபரணை ஹிரிவடுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இதில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.