எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் கையிருப்பு
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்திடம் சுமார் ஐந்தரை பில்லியன் டொலர்கள் கையிருப்பு உள்ளது.
“இப்போது வாகனங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, தேவைக்கேற்ப கொண்டு வரவும் அனுமதிக்கப்படுகிறது. சுற்றுலாத் துறைக்கான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம்.
நாட்டின் தேவை
தேவைக்கேற்ப வாகனங்களை அனுமதியுடன் கொண்டு வாருங்கள். இதை நாம் மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.
மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்ளாமல் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல விரும்புகிறோம். இப்போது எங்களிடம் 5.5 பில்லியன் டொலர் கையிருப்பு உள்ளது. நாட்டின் தேவைக்கேற்ப, எமக்கு ஏற்றவாறு வாகன இறக்குமதி செய்ய தயாராக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.