வரலாற்று பிரசித்தி பெற்ற முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் வைகாசி பொங்கல் விழாநடைபெற்றுவரும் நிலையில் , ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து குடைசாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளமை துயரத்தை ஏற்டுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து ஆலயத்திற்கு சென்றவர்களுக்கே இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பேருந்து தடம்புரண்டு விபத்து
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு
இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், பூநகரி பாலம் தாண்டி வந்துகொண்டிருந்த போது பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது
இந்நிலையில் பேருந்தில் பயணித்த ஆறு பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், அவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.