முந்தலம் – பரலங்காட்டுவ பகுதியில் மின்சாரம் தாக்கி வர்த்தகர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தனது கால்நடைப் பண்ணையில் மின்சார திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கம்பஹா – இம்புல்கொடையை வசிப்பிடமாகக் கொண்ட மொனர பிடிகும்புரமுல்லையைச் சேர்ந்த சனத் குமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் 20ஆம் திகதி மாலை குறித்த நபர் தான் சொந்தமாக நடத்தி வரும் கால்நடைப் பண்ணையின் கதவை சரி செய்துகொண்டிருந்தபோதே மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.