கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஸ்குவாமிஸ் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு மீட்புப் பணியாளர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விமான விபத்து இடம்பெற்ற பகுதியில் சீரற்ற காலநிலை நீடித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.