சீரற்ற காலநிலையால் சிக்கிக் கொண்டால் உடனடியாக 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்குவதற்காகவும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை
மேலும் முடிந்தளவு கையடக்க தொலைபேசிகளை சார்ஜ் செய்து தொடர்புக் கொள்ள கூடிய வகையில் வைத்துக் கொள்ளுமாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.