கிளிநொச்சி – பளை கரந்தாய் பகுதியில் முன்னால் சென்ற தனியார் பேரூந்தை பின்னால் வந்த அரச பேரூந்து மோதி தள்ளியதில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பயணிகள் விசனம்
இன்று (06)காலை 10.00 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து பயனிகளை ஏற்றுவதற்காக பேரூந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த தனியார் பேரூந்தை பின்னால் வந்த அரச பேருந்து மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் புறப்பட்டு வருவதால் இரு தரப்பிற்கும் இடையில் அடிக்கடி முறுகல்நலை ஏற்படுவதாகவும் இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பயணிகள் சுற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேரூந்தை அரச பேரூந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இரு பேரூந்துகளின் உடைந்த கண்ணாடி துண்டுகள் வீதியில் கிடந்ததாகவும் பாடசாலை மாணவர்கள் அதிகம் நிற்கும் இடம் அதனால் துப்பரவு செய்து செல்லுமாறு, கரந்தாய் கிராம மக்களால் தெரிவிக்கப்பட்ட போது அரச பேரூந்து உத்தியோகத்தர் ஒருவர் தரக்குறைவாக மக்களிடம் பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட நேர வாக்குவாதத்தின் பின் வீதியில் கிடந்த கண்ணாடி துண்டுகள் அகற்றப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது.