எதிர்நீச்சல் சீரியலில் நீதிமன்றத்தில் குணசேகரனுக்கு எதிராக அனைவரும் சாட்சி கூறிய நிலையில், அப்பத்தா மாஸாக எண்ட்ரி கொடுத்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.
மாஸ் எண்ட்ரி கொடுத்த அப்பத்தா
குறித்த சீரியல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், நீதிமன்றத்தில் குணசேகரன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக குடும்பத்தில் உள்ள பெண்கள் சாட்சி கூறிவந்த நிலையில், தற்போது இறந்து போனதாக கருதப்பட்ட அப்பத்தா மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
அப்பத்தாவின் மாஸ் எண்ட்ரியை அவதானித்த ஒட்டுமொத்த குடும்பமும், நீதிபதியும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். குறித்த சீரியல் இடையில் சற்று சுவாரசியம் குறைவாக இருந்தாலும், இதற்கு என்றே ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகத் தான் இருந்தனர்.