சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையானது, விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் இலங்கையின் இரண்டாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது நாட்டிற்கு மூன்றாவது தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற வழி வகுத்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
நமது திட்டத்தின் 2வது மதிப்பீட்டை IMF ஒப்புதல் அளித்துள்ளது, எங்கள் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எங்கள் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது. இந்த சாதனை நமக்கு நிலைத்த நலனையும் நிலைத்தன்மையையும் வழிசெய்கிறது. ஒன்றாக, நாங்கள் சிறந்த நாளை கட்டியெழுப்புகிறோம்! 🇱🇰 #SriLankaForward…
— M U M Ali Sabry (@alisabrypc) June 12, 2024