பொதுவாக ஒரு திருமணம் உறவை பலப்படுத்த வேண்டும் என்றால் நம்பிக்கை, நேரம் மற்றும் முயற்சி ஆகியவை மிக முக்கியமானதாக பார்ப்படுகின்றது.
அதே சமயம் நாம் விடும் சிறு தவறுக் கூட உறவில் மிகப் பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகின்றன.
நீங்கள் விரும்பும் துணையை உங்களுடன் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களுக்காக சில விடயங்களை விட்டுக் கொடுக்க வேண்டும்.
அப்படி வாழ்க்கைத்துணைக்காக நீங்கள் செய்ய வேண்டியவை தொடர்பில் தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கணவன் – மனைவி பிரச்சினையை தடுப்பது எப்படி?
1. கணவன் – மனைவி உறவில் சண்டை வருவது இயல்பு. ஆனால் சண்டை முடிந்த பின்னரும் இருவரும் ஒருவருக்கொருவர் பேசாமல் இருப்பது அவர்களின் குடும்ப வாழ்க்கையை பாதிக்கிறது.
2. எக்காரணம் கொண்டும் ஒரு உறவில் இருக்கும் பொழுது நம்பிக்கை துரோகம் மாத்திரம் செய்யாதீர்கள். இது உங்கள் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடும். எதுவாக இருந்தாலும் உங்கள் துணையிடம் கலந்து பேசி விட்டு முடிவு செய்வது நல்லது.
3. உங்கள் துணையிடம் எப்போதும் அன்பு, அக்கறை காட்ட வேண்டும். பொதுவாக பெண்கள் கணவன் அல்லது காதலனிடம் இதை தான் முதலில் எதிர்பார்ப்பார்கள். இதனை கணவர்கள் செய்தாலே போதும் குடும்ப வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
4. புரிந்துணர்வு மற்றும் விட்டுக் கொடுப்பு இது குடும்ப வாழ்க்கைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும். எல்லாவற்றிற்கும் கோபப்பட்டு எதையும் சாதிக்க முடியாது. ஆகவே பிரச்சினை வரும் பொழுது பொறுமை காப்பது சிறந்தது.
5. துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடந்து கொள்வதால் நீங்கள் எப்படியானவர்கள் என்று உங்கள் துணை புரிந்து கொள்வார். வேலை, பணப்பிரச்சினை இது போன்ற நேரங்களில் மனைவி அல்லது கணவன் விட்டுக் கொடுத்து போவது குடும்ப வாழ்க்கையை திறன்பட வைக்கும்.