தெகிடி படப்புகழ் பிரதீப் கே விஜயன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன், கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
மாரடைப்பு என சந்தேகம்
இதனையடுத்து சந்தேகமடைந்து பொலிஸார் உதவியோடு அவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பிரதீப் கே விஜயன் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரதீப் கே விஜயன் மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், அவரது திடீர் மரணம் பிரதீப் கே விஜயன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.