தென்னிந்திய பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் சரிகமப நிகழ்ச்சி இலங்கைத் தமிழர்களிடையேயும் மிகப் பிரபலம். பலரும் ஆர்வமுடன் பார்க்கும் தொலைக்கட்சி நிகழ்ச்சியில் ஜீ தமிழ் சரிகமப ம் ஒன்றாகும்.
இந்நிலையில் இலங்கை தமிழர்களும் உள்ளீர்க்கப்பட்டு வரும் நிலையில் கடந்த வருடம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிக்ஷா பெற்றிருந்தார்.
பாடலை இடையில் நிறுத்திய போட்டியாளர்
தற்போது சரிகமப சீசன் 4 இடம்பெற்றுவரும் நிலையில் மேடையில் பாடி கொண்டிருந்த பாடகர் சரத் பாட்டை பாதியில் நிறுத்தியதால் அரங்கமே க்ஷாக்காகி நிற்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த வாரம் மணிரத்னத்தின் மௌன ராகங்கள் சுற்று இடம்பெறவுள்ளது. இதில் மனதை வருடும் மென்மையான பாடல்களை போட்டியாளர்கள் பாடிக்கொண்டிருக்கின்றனர்
இந்நிலையில் நேற்று மாலை வெளியான ப்ரோமோவில், சரத் விக்ரம் நடிப்பில் வெளியான இராவணன் படத்தின் “உசுரே போகுது உசுரே போகுது” பாடலை தெரிவு செய்து பாடுகின்றார்.
அரங்கமே ரசித்துக்கொண்ருக்க , எனினும் இடையில் அவர் பாதியில் நிறுத்தி விட மேடைக்கு வந்த நடுவரும், பாடகருமான காரத்திக் அவரை தட்டி கொடுத்து மீதி பாடல்களை இருவரும் சேர்ந்து பாடிய ப்ரோமோ வெளியாகி உள்ள நிலைல் அக்காட்சி அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.