இலங்கை மத்திய வங்கியின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் பிரகாரம், அவர்கள் பதவி விலக வேண்டுமென கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சம்பள அதிகரிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 70 உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரித்துள்ளதாக முதலில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கிடைத்துள்ள அறிக்கையின்படி, மத்திய வங்கி அதிகாரிகள் உண்மையிலேயே பதவி விலக வேண்டும் என தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்த அறிக்கை நிரூபிக்கிறதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற உத்தியோகத்தர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கப்படினும் நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனவும், ஆனால் அது அப்படி நடக்கவில்லை என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.