இலங்கையில் எல்ஜிபிடிகியு (LGBTIQ)சமூகத்தினரையும், பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ் எச்சரித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பெண்களை வலுப்படுத்தும் சட்டமூலத்தையும் பாலின சமத்துவ சட்டமூலத்தையும் கடுமையாக விமர்சித்துள்ள அகில இலங்கை பௌத்த காங்கிரஸ், இந்த சட்டமூலம் எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும், பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் உள்நாட்டு கலாச்சாரம் நெறிமுறைகள் விழுமியங்களை சமரசம் செய்யும் என தெரிவித்துள்ளது.
சட்டங்களை கொண்டுவரக்கூடாது
மேற்குலகில் கூட பிள்ளைகள் பால் மாற்றத்தில் ஈடுபடுவதை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், பௌத்தகாங்கிரஸின் தலைவர் சந்திரா நிமல் வகிஸ்ட தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒரு குடும்ப அடிப்படையிலான தாய்வழி சமூகம் என தெரிவித்துள்ள அவர் , இந்த சட்டமூலங்கள் இலங்கையின் நெறிமுறைகள் மற்றும் விழுமியங்களை நிச்சயம் சமரசம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு பாலியல் நோக்குநிலையை கொண்டவர்கள் உள்ளனர் .அவர்களின் சார்பில் தனிதனி சட்டங்களை கொண்டுவரக்கூடாது என வலியுறுத்திய சந்திரா நிமல் வகிஸ்ட , எனினும் அனைவரையும் சமமமாக நடத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டமூலங்கை நடைமுறைப்படுத்தினால் அதன் காரணமாக கலாச்சார சட்ட குழப்பங்கள் ஏற்படும். இது இலங்கை ஜனாதிபதி அன்னிய கருத்துக்களை எம்மீது திணிக்க முயலக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.