இளம்பெண் ஒருவர் பூத்தொட்டியை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்ட வீடியோ, ஒரு இளம் பெண் பூந்தொட்டி ஒன்றில் வளர்க்கப்படும் செடியை சாப்பிடுவதைக் காட்டுகிறது.
இது sthefannyoliveiratv என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டது. இந்த வீடியோ இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பாகத்தில், இந்த பெண் பூந்தொட்டி ஒன்றில் வளர்க்கப்படும் செடியை சாப்பிடுவது போல் காட்டப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த வீடியோவை கடைசி வரை பார்த்தாலே புரியும் அது சாக்லேட்டால் ஆன பூந்தொட்டி என்று. அந்த பெண் எப்படி சாக்லேட்டை பயன்படுத்தி ஒரு செடியை அற்புதமான வடிவத்துடன் உருவாக்குகிறார் என்பதை அந்த காணொளி காண்பிக்கின்றது.
View this post on Instagram