சீனா(China) மற்றும் பிரான்ஸ்(France) இணைந்து முதல் வானியல் செயற்கை கோளை விண்ணில் ஏவியுள்ளன.
குறித்த செயற்கை கோளானது சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவானில் உள்ள ஜிசாங் ஏவுதளத்தில் இருந்து லாங் மார்ச் 2சி ரொக்கெட்டில் ஏவப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதாக சீன அதிகாரிகள் தெரிவித்த நிலையில் புறப்பட்ட சிறிது நேரத்தில், ரொக்கெட்டின் ஒரு பகுதியான பூஸ்டர் மீண்டும் பூமி நோக்கி வேகமாக வந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்பட்ட சேதங்கள்
புகையை கக்கியபடி வேகமாக வந்த ரொக்கெட்டின் பாகத்தை பார்த்த பொதுமக்கள் அச்சமடைந்து ஓடியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேகமாக பூமியை நோக்கி வந்த அந்த ரொக்கெட்டின் பாகம் குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்தான தகவல் வெளியாகாத நிலையில் குடியிருப்புக்குள் ரொக்கெட் பாகம் விழும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Annnnd China dropped another booster stage full of hypergolics on a local village pic.twitter.com/kxpk37rWhP
— Chris Combs (iterative design enjoyer) (@DrChrisCombs) June 22, 2024