ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் வேட்பாளர் ஒருவர் இரகசியமாகப் பாதுகாப்பாக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்த சுமார் 25 கோடி ரூபாய் பெறுமதியான டொலர்களை கரையான் அரித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட டொலர்களே கரையான்களால் அரிக்கப்பட்டுள்ளன என தென்னிலங்கை ஊடகமொன்று கூறியுள்ளது.
கரையான் அரித்த டொலர் நோட்டுகளுக்கு புதிய டொலர்
இந்த நிலையில் முன்னாள் வேட்பாளரின் கோரிக்கையின் பேரில் ஒரு பிரதானியின் தலையீட்டின் மூலம், கரையான் அரித்த டொலர் நோட்டுகளுக்கு பதிலாக புதிய டொலர் நோட்டுகள் இந்த முன்னாள் வேட்பாளருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக அந்த பிரதானி உதவி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
டொலர்களை எடுப்பதற்காக, டொலர்கள் வைப்பிலிடப்பட்டுள்ள பணப் பெட்டகத்தை சோதனையிட்ட போது கரையான்கள் அவற்றை அரித்தமை கண்டு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
அதன்பின், அந்த டொலர்களை புதிய நோட்டுகளாக மாற்ற, பிரதானியிடம் வேட்பாளர் உதவி கேட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரின் டொலர் சம்பவமே அண்மைய நாட்களாக அரசியல் களத்தில் பல இடங்களில் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.