நடிகை சுனைனா திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரபலத்தின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகை சுனைனா
தமிழ் சினிமாவில் “காதலில் விழுந்தேன்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை சுனைனா.
இதனை தொடர்ந்து மாசிலாமணி, தெறி, சமர், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகையாக பார்க்கப்படுகிறார்.
திருமண அறிவிப்பு
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுனைனா தன்னுடைய திருமணம் குறித்து அறிவிருந்தார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து மாப்பிள்ளை யார் யார் என நெட்டிசன்கள் தேடிக் கொண்டிருந்த வேளையில் புது தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதாவது, துபாயை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவரை தான் சுனைனா திருமணம் செய்யவுள்ளாராம்.
அவருடன் மோதிரம் மாற்றிக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
மாப்பிள்ளை யார் தெரியுமா?
நடிகை சுனைனா திருமணம் செய்துக் கொள்ள இருப்பவர் துபாய் யூடியூபராக இருக்கிறார். இவர் பெயர் காலித் அல் அமேரி என்பதாகும்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது திருமணத்திற்காக துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளாராம்.
சுனைனாவின் முடிவிற்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.




















