உலக சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
அந்தவகையில் இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 194,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 180,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கம் ஒருகிராமின் விலை 24,312 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.