ஐ.தே.கட்சியின் தம்புள்ளை தொகுதி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள பதாகைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் தவிசாளர் திருமதி மாயா பதெனியவின் வீட்டிலேயே குறித்த அலுவலகம் உள்ளது.
குறித்த அலுவலகம் முன்பாக ஜனாதிபதி ரணில் மற்றும் தம்புள்ளை தொகுதி அமைப்பாளர் ஆகியோரின் உருவ படங்களுடன் கூடிய பதாகைகளே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.