இந்தியன் 2
கமல்ஹாசன் 10 நிமிடங்களே நடித்த கல்கி 2898ஏடி படம் வெளியானதை தொடர்ந்து நேற்று (ஜுலை 12) வெளியான படம் இந்தியன் 2.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பலர் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
நீண்ட காலமாக பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்தியன் 2 படம் இந்தியா முழுவதும் சுமார் 7801 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.
படத்திற்கான முன்பதிவுகள் கூட தாறுமாறாக நடந்தது, முனபதிவின் மூலம் முதல் நாளில் ரூ. 35 முதல் ரூ. 40 கோடி வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
முதல் நாள்
வசூல் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இந்தியன் 2 படம் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல்நாள் வசூல் அமோகமாக நடக்கும் என எதிர்ப்பார்க்கையில் அதேபோல் தான் நடந்துள்ளது.
அதாவது கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.