நாளையதினம் 17 ஆம் திகதி ஆடிப்பிறப்பு தினமாகும் . தமிழ் நாட்காட்டியின் ஆடி மாத முதலாம் நாள் ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பிறப்பினை பண்டிகை ஈழத் தமிழர்களின் விமரிசையாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றாகும்.
அத்துடன் ஆடிப்பிறப்பு என்றதுமே முதலில் ஞப்பகத்திற்கு வருபவர் நவாலியூர் சோமசுந்த புலவரும் அவர் பாடிய ப்பாடலும் தாம்.
ஈழத்தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிகுந்த நாள்
அந்தவகையில், ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே … கூடிப்பனங்கட்டி கூழும் குடிக்கலாம் கொழுகட்டை தின்னலாம் தோழர்களே… இது யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்த புலவர் ஆடிப்பிறப்பு பற்றி பாடிவைத்துள்ளார்.
இந்த நாளில் வீடுகளில் கொழுகட்டை , ஆடிக்கூழ் என்பன சமைத்து உறவுகளுடன் உண்டு மகிழ்வார்கள்.
பனங்கட்டி, தேங்காய் துண்டுகள் கலந்த மாவின் சுவை சொட்டும் கூழ், சர்க்கரையின் (வெல்லம்) தித்திப்புடன் கொழுக்கட்டை இவையிரண்டும் ஈழத்தமிழர்களின் (சைவமக்களின்) வீடுகளில் ஆடிப்பிறப்பன்று தவறாது இடம்பிடிக்கும் உணவுகள் ஆகும்.
ஆடி மாத்தின் சிறப்புக்கள்
முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள் – இந்து சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது.
அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்க தினம் (இன்று) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். இக்காலத்தில் கோடைகால வெப்பம், காண்டாவனம் உட்பட, வெப்பம் தணிந்து குளிர்மை படிப்படியாகப் வளர்கின்றது.
இக் காலத்திலேயே விதை விதைத்தல், மரங்கள் நடுதல் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன. ஆடி மாதத்தை பொறுத்தவரை மாதப்பிறப்பு துவங்கி அனைத்து நாட்களுமே முக்கியமான நாட்கள் தான்.
திதி, கிழமை, நட்சத்திரம் என அனைத்தும் சிறப்பு பெறுவது ஆடி மாதத்தில் தான். ஆடி மாதத்தில் ஆடி மாத பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி 18, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி பெளர்ணமி என அனைத்தும் சிறப்புக்குரிய நாட்களாகும்.
2024 ஆடி மாதமுக்கிய நாட்கள் விபரம்
ஆடித்தபசு, ஆடிப்பெளர்ணமி – ஜூலை 21 – ஆடி 05 (ஞாயிறு)
ஆடிக்கிருத்திகை – ஜூலை 29 – ஆடி 13 (திங்கள்)
ஆடிப்பெருக்கு – ஆகஸ்ட் 03 – ஆடி 18 (சனி)
ஆடி அமாவாசை – ஆகஸ்ட் 04 – ஆடி 19 (ஞாயிறு)
ஆடிப்பூரம் – ஆகஸ்ட் 07 – ஆடி 22 (புதன்)
நாக சதுர்த்தி – ஆகஸ்ட் 08 – ஆடி 23 (வியாழன்)
கருட பஞ்சமி, நாக பஞ்சமி – ஆகஸ்ட் 09 – ஆடி 24 (வெள்ளி)
வரலட்சுமி விரதம் – ஆகஸ்ட் 16 – ஆடி 31 (வெள்ளி)