மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிப்புக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவத்தால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது..
குறித்த வெடிப்பு சம்பவம் நேற்றையதினம் (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பாரியளவிலான சப்தம்
பூநொச்சிமுனை பச்சை வீட்டுத்திட்டம் என்னும் குடியேற்ற கிராமத்திலேயே இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியுள்ள நிலையில் வீட்டின் அறையொன்றிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பாரிய சேதங்கள் ஏற்படாத நிலையிலும், இதன்போது பாரியளவிலான சப்தம் மிக நீண்ட தூரத்துக்கு கேட்டதாக அப் பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை நீல நிறத்திலான பொருள் ஒன்று வீட்டின் ஓட்டை உடைத்துக்கொண்டு சென்றதாக வீட்டில் தங்கியிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இராணுவத்தினரும் பொலிசாரும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.