ஜனநாயக இடதுசாரி முன்னணியின்( Democratic Left Front) தலைவர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தற்காலிகமாக விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுகயீனம் காரணமாக அவர் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி விலகல்
இதற்கான உத்தியோகபூர்வ நியமனம் இன்று(16) பிற்பகல் 2 மணிக்கு பத்தரமுல்லையில் உள்ள அபேகம வளாகத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் பணிகளை சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டியதன் காரணமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோசன் பிரேமரட்னவை தலைமைப் பதவியில் அமர்த்துவதாக கட்சியின் பிரதி செயலாளர் ஜே.டி.வீ திலகசிறி தெரிவித்துள்ளார்.