தெதுரு ஓயா நீரோட்டத்தில் நீராடச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் ஹட்டன், மவுன்டன் வத்த பகுதியைச் சேர்ந்த 20 வயதான கருணாநிதி கோபிநாத் எனும் இளைஞனே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குடும்பஸ்தர் ஹட்டன் – மவுன்டன் வத்தை பகுதியில் இருந்து சிலாபம் பகுதியில் உள்ள எண்ணை ஆலை ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்த இளைஞன் சிலாபம் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், தனது மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சிலாபம் தெதுரு ஓயா நீர்நிலைக்கு சென்று நீராடிய போதே குறித்த இளைஞன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.