இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 12 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். அதற்கமைய,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச,
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ,
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர,
தொழிலதிபர் தம்மிக்க பெரேரா,
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க,
முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.
வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம்
இது தவிர வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரையும், முன்னிலை சோஷலிசக் கட்சியின் மக்கள் போராட்ட இயக்கத்தின் வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் மிகவும் சூடு பிடிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.