ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் , வைத்திய மாணவர்கள் சிலர் கிளப் வசந்தவின் சடலத்தை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலத்தை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட சம்பவம் தொடர்பில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் 30 பேரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பதிவு
கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உயிரிழந்திருந்தார்.
இதனையடுத்து, சடலத்தைப் பிரேத பரிசோதனைக்குட்படுத்தும் போது, அங்கிருந்த வைத்திய மாணவர்கள் சிலர் சடலத்தை நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.