ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நஷ்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாவும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு தலா 75 மில்லியன் ரூபாவும்,
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும், முன்னாள் தேசிய புலனாய்வுத் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாவும் கிடைத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைய அவர் செலுத்த வேண்டியிருந்த எஞ்சிய தொகையான 12 மில்லியன் ரூபாவை அவர் 16.08.2024 அன்று செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன ஆகியோருக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.