ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட பண்புகள் மற்றும் ஆளுமையில் பெருமளவில் தாக்கம் செலுத்துவதாக நம்பப்படுகின்றது.
இந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் தங்களின் குறிப்பிட்ட சில குணங்களின் காரணமாக அவர்களின் துணைக்கு கொடுத்த வாக்குறுதிகளை எந்த நிலையில் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.
அவர்களுக்கு அர்பணிப்புடன் செயற்படுவது முடியாத காரியமாக இருக்கும் இது போன்ற பிரச்சினைகளால் துணைக்கு இவர்களுடன் வாழ்வதே மிகவும் கடினமான விடயமாக மாறிவிடும்.அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எந்த விடயங்களிலும் பல்வேறு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்களாக இருப்பார்பகள். அதனால் அவர்கள் ஒருவருக்கு முக்கியத்துவம் கொடுப்பதை பெரும்பாலும் தவிர்க்கவே நினைக்கின்றார்கள்.
இவர்கள் பலருடன் நட்பாக பழகவும் விருப்பங்களை பகிர்ந்துக்கொள்ளவும் நினைக்கின்றார்கள். இவர்கள் துணையிடம் உண்மையாக இருப்பதும் துணையின் விருப்பங்ளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் முடியாத காரியமாக இருக்கும். அதனால் இவர்களுடன் வாழ்வது பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் தனிமை விரும்பிகளாக இருப்பார்கள் இவர்கள் எப்போதும் கற்பனை செய்வதில் வல்லலர்களாக இருப்பதால் வாழ்வில் பாதியை கற்கனை உலகிலேயே கழித்துவிடுவார்கள்.
இவர்கள் துணையுடன் அதிக நேரத்தை செலவிட விரும்புவது கிடையாது. இவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை விடவும் ஏனையோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அதனால் உறவில் அதிக பிரச்சிகைள் ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
தனுசு
தனுசு ராசியினர் இயல்பாகவே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள்.அவர்கள் இயற்கையை ஆராய்வதிலும் சாகசங்களில் ஈடுபடுவதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இவர்கள் நினைக்கும் விடயங்கள் பிழையாகவே இருந்தாலும் கூட அதை செய்ய வேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இதனால் துனைக்கும் இவர்களுக்கும் இடையில் அதிக முறன்பாடுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையும். அவர்களுடன் வாழ்க்கை நடத்துவது பெரும் போராட்டமாகவே அமையும்.