ஜேர்மனியில் (Germany) கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கத்திகுத்து தாக்குதலானது கொலோனுக்கு கிழக்கே உள்ள சீகனில் மேற்கு ஜேர்மனியில் திருவிழாவொன்றிற்கு சென்று கொண்டிருந்த பேருந்தில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், குறித்த தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, கத்திக்குத்து தாக்குதலிற்கு இலக்கானவர்களிற்கு உயிராபத்து இல்லையெனவும் இந்த தாக்குதலின் பின்னணியில் அரசியல் மத நோக்கங்கள் இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தவிபத்தில், காயமடைந்தவர்கள் 16 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களெனவும் மற்றும் இவர்களில் மூவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த வாரம் ஜேர்மனியில் சிரியாவை (Syria) சேர்ந்த நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் மூவர் கொல்லப்பட்டிருந்திருமை குறிப்பிடத்தக்கது.