யாழ்ப்பாணம், தெல்லிப்பழை அரச வைத்தியசாலைகளில் தமது புற்றுநோய்கான சிகிச்சைகளை தொடரச் சென்றபோது அங்கு கடமையாற்றும் பெண் புற்றுநோய் சிறப்பு வைத்தியர்களால் அடாத்தாக தயவு தாட்சண்யமின்றி சிகிச்சை மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
கொழும்பு மஹரகம வைத்தியசாலை சிறப்பு வைத்திய நிபுணர்களால் முதல்கட்ட புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நோயாளிகள் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருக்க முடியாமையாலும், பொருளாதார இயலாமையாலும் தமது சொந்தவிருப்பில் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சிகிற்சை பெற வந்தனர்.
மனித உரிமை ஆணைக்குழு விசாரணை
இந்நிலையிலேயே நோயாளிகள், வைத்தியசாலையில் கடமியாற்றும் பெண் புற்றுநோய் சிறப்பு வைத்தியர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்விடயம் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேற்குறித்த மனித அவலத்துக்கு காரணமான யாழ்ப்பாணம், தெல்லிப்பழை அரச வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களான வைத்தியர் சத்தியமூர்த்தி, வைத்தியர் தேவநேசன் ஆகியோரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் சம்பவம் தொடர்பில் விசாரணையை உடன் நடாத்துமாறும் மனித உரிமை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.