சுமந்திரன் எப்படி TNA க்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் கேள்விகூறியுள்ளார்.
விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு, சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
அதோடு தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர் , 2010 ஆம் ஆண்டு எவ்வாறு சுமந்திரன் எப்படி TNA க்குள் தெரியாமல் வந்தாரோ, அதேபோல அவர் தெரியாமல் துரத்தப்படுவார் எனவும் சண்முகம் ஜீவரா தெரிவித்தார்.