ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickramasinghe) நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
அத்துடன் ரணில் விக்ரமசிங்கவை பெரும் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும் அநுரகுமார (Anura kumara Dissanayake ) தெரிவித்துள்ளார்.
ஆனமடுவவில் நேற்று (09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க நிச்சயமாகத் தோல்வியடைவார். அவருக்கு கிராமங்களில் வாக்கு இல்லை.
ரணிலின் போலி பேச்சுகளில் நாங்கள் சிக்கிக்கொள்ள மாட்டோம். மத்திய வங்கி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொண்டு ரணிலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வேன்.
காணி மோசடி, மதுபானசாலை அனுமதி வழங்கியமை, எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அனுமதி வழங்கியமை தொடர்பிலும் விசாரணை செய்வேன்.
அப்போதே அவரின் தோழராக இருக்கும் எனது அருமை அவருக்குப் புரியும்.