நாட்டில் கடந்த நாட்களை விட இன்று (14) மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோகிராம் கெரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் வெண்டைக்காய் 180 ரூபாவிற்கும், ஒரு கிலோகிராம் கோவா 2000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோகிராம் பாகற்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.