வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்பாணம் நாவாந்துரை பகுதியில் இன்று (14) நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் வருமானம் அதிகரித்துள்ள காரணத்தினால் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கி வாகன இறக்குமதி செய்வதற்கான நடைமுறைகளை தாம் ஏற்படுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.