தெற்காசிய கனிஸ்ட நிலை தடகளப் போட்டிகளில் இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றுக்காண்டுள்ளது.
இதில் ஒன்பது தங்கம், ஒன்பது வெள்ளி மற்றும் 17 வெண்கலத்துடன் இலங்கை இரண்டாவது இடத்தை பெற்றது.
குறித்த போட்டித்தொடரில் இந்தியா 21 தங்கம், 22 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள் உட்பட 48 பதக்கங்களை தனதாக்கி முதலிடத்தை பதிவு செய்தது.
சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற குறித்த போட்டித்தொடர்கள் அனைத்தும், நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
மேலும், இதிர் பங்களாதேஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.