இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ள நிலையில் தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் அடுத்து வரும் நாட்களில் பல முக்கிய அரசியல் மாற்றங்கள் மற்றும் கட்சி தாவல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து பிரதான கட்சி மட்டத்தில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கட்சி மாறுதலுக்காக இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அதிக அனுகூலங்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
அண்மையாக கருத்துக்கணிப்புகளுக்கு அமைய வயதானவர்களின் ஆதரவு ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஏனைய வயதினர் சஜித் மற்றும் அனுரவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் பல்வேறு காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகிறார்.
இதன் காரணமாக தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது